அமைச்சர் செல்லூர் ராஜூ 
செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் விழா- செல்லூர் ராஜூ பேசுகிறார்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி புதூரில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகிறார்.

மதுரை:

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை கோ.புதூரில் 12-வது வார்டு அ.தி.மு.க. சார்பில் வட்ட செயலாளர் கே.வி.கே. கண்ணன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறர்கள். விழாவில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.