சந்தோஷ் கங்வார் 
செய்திகள்

மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் ராஜிமானா

மோடி தலைமையிலான மந்திய மந்திர சபை இன்று மாலை 6 மணிக்கு மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

மாலை மலர்

மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் 52 அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர். 81 அமைச்சர்கள் இடம் பெறலாம். இதனால் மந்திரி சபையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்தார்.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன. இன்று மாலை மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறுகிறது. புதிய மந்திரிகள் பதவி ஏற்க இருக்கிறார்கள். ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அமைச்சராக இருக்கும் சிலருடை பதவியும் பறிக்கப்பட வாய்ப்புள்ளது.

மந்திரி சபையில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் எம்.பி.க்கள் பிரதமர் மோடி இல்லத்திற்கு சென்ற வண்ணமம் உள்ளனர்.