கோப்புப்படம் 
செய்திகள்

விஜய் அரசியலுக்கு வருவதால் யாருக்கும் காய்ச்சல் வரவில்லை- அமைச்சர் உதயகுமார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் யாருக்கும் இங்கு காய்ச்சல் வரவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். #MinisterUdhayakumar #VijayPolitics

நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த தகவலை சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சூசகமாக தெரிவித்தார். அவரது பேச்சுக்கு சிலர் ஆதரவு அளித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர். அதன்பின்னர் சமீபத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுவதாக கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தால் அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை’ என்றார்.