மதுரை:
மதுரையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் அளித்தல் துறையின் மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டில் வன் கொடுமை சட்டத்திருத்தம் தொடர்பாக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எனவே இந்த சட்டம் நீர்த்துப்போகும் என்ற கேள்விக்கே இட மில்லை. மோடி வலிமையான தலைவர். ஆனால் ராகுல் அப்படி அல்ல.
தலித்துகளின் எதிரியாக மோடியை சித்தரிப்பது தவறு. அம்பேத்கர் கொள்கையை பின்பற்றியதால்தான், இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன் என்று மோடியே ஒருமுறை கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு மாநிலம்தான். ஆனாலும் சில இடங்களில் ஆணவக் கொலைகள் நடந்து வருகிறது. பா.ம.க. தலைவர் ராமதாஸ் தலித்துகளை எதிரியாக நினைக்கும் போக்கை கைவிட வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து கலப்பு திருமணத்தை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் எதிர்காலத்தில் சாதிகளே இல்லாத நிலை ஏற்படும்.
2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் மாநில உரிமைகள், நிதி ஒதுக்கீடுகளை உரிமையோடு பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ramdasathawale #admk #parliamentelection