சிவகாசி:
பட்டாசு ஆலை வேலை நிறுத்தம் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், பட்டாசுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என நானும், பட்டாசு ஆலை உரிமையாளர்களும் முதல்வரை சந்தித்து கோரினோம்.
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வருகிற 30-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். பட்டாசுக்கான 28 சதவீத வரியால் நாடு முழுவதும் ஒரு கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர். இது தொடர்பாக மத்திய அரசிற்கு தமிழக அரசு மேலும் அழுத்தம் கொடுக்கும்.
பட்டாசு உற்பத்திக்கும், பட்டாசு தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.