செய்திகள்

பால் நிறுவனங்கள் வழக்கை சந்திக்க தயார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

தமிழகத்தில் சில தனியார் நிறுவன பாலில் கலப்படம் உள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்றம் சாட்டினார்.

சில தனியார் நிறுவனங்களின் பால் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அமைச்சரின் இந்த குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்துள்ளன.


இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடருவோம் என்று தனியார் பால் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

SCROLL FOR NEXT