செய்திகள்

செஞ்சி அருகே அமைச்சர் ராஜலட்சுமி சென்ற கார் விபத்தில் சிக்கியது

செஞ்சி அருகே பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசார் கார், அமைச்சர் ராஜலட்சுமி கார் மீது மோதியது. இதில் அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

மாலை மலர்

செஞ்சி:

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ராஜலட்சுமி ஆகியோர் தனித்தனி கார்களில் இன்று காலை புறப்பட்டனர். 11 மணியளவில் அவர்கள் சென்ற கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வழுக்கம்பாறை பகுதியில் சென்றது.

அமைச்சர் ராஜலட்சுமி கார் முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பள்ளத்தில் அவரது கார் திடீரென்று நின்றது. அந்த நேரத்தில் பாதுகாப்பு பணிக்கு பின்னால் வந்த போலீசார் கார் அமைச்சர் ராஜலட்சுமி கார் மீது மோதியது.

இதில் அமைச்சரின் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்த அமைச்சர் ராஜலட்சுமி காயம் ஏதுமின்றி உயிர்தப்பினார். பின்னர் அவர் சேவூர் ராமச்சந்திரன் காரில் ஏறி திருவண்ணாமலை புறப்பட்டு சென்றார். #tamilnews