செய்திகள்

3 பல்கலை கழகங்களுக்கு விரைவில் துணை வேந்தர் நியமனம்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலை கழகத்துக்கு விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தரின் கையெழுத்துக்கு பதில் கன்வீனர் கமிட்டி தலைவர் கையெழுத்து உள்ளது. இது சட்டப்படியானது. எனவே தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலை கழகத்துக்கு விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான அனைத்து பணிகளையும் அரசு செய்து விட்டது. துணை வேந்தர் பட்டியலை தேர்வுக்குழு விரைவில் கவர்னரிடம் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.