அமைச்சர் கேபி அன்பழகன் 
செய்திகள்

அமைச்சர் அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளது- மியாட் மருத்துவமனை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் தங்கமணி, அமைச்சர் கே.பி. அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தனி அறையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் அன்பழகன் விரைவாக குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் குணமடைந்து வீடுதிரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.