அமைச்சர் கேபி அன்பழகன் 
செய்திகள்

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை ஒதுக்கீடு

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

கொரோனா தொற்று பாதித்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு காலமானார். 

துரைக்கண்ணு மறைவு அடைந்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த வேளாண் துறை பொறுப்பு  உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக  ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.