செய்திகள்

பாலியல் பலாத்காரத்தால் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- அமைச்சர் வழங்கினார்

பாலியல் பலாத்காரத்தால் இறந்த பிளஸ்-2 மாணவியின் குடும்பத்தினருக்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். #ministerkpanbalagan

மாலை மலர்

தருமபுரி:

அரூர் அருகே பாலியல் பலாத்காரத்தால் இறந்த பிளஸ்-2 மாணவியின் குடும்பத்தினருக்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவியை மாணவியின் பெற்றோரிடம் அவர் வழங்கினார். 

மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அமைச்சர் தெரிவித்தார். அப்போது பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர். #ministerkpanbalagan