சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று தொடங்கியது. இதற்காக திருவேற்காடு சாலையில் உள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது,
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வணிகர்கள் உள்ளனர். அவர்களின் உழைப்புக்கு ஈடு இணையில்லை. வணிகர்கள் நலன் காக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான்.
வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ள 58 பொருட்களுக்கான வரிகளை குறைப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்குவதை மாணவர்களுக்கு சிபிஎஸ்இ முன்னரே தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். #Jayakumar