அமைச்சர் ஜெயக்குமார் 
செய்திகள்

அனுமதி பெற்று பேனர் வைப்பதில் தவறில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு இன்றி அனுமதி பெற்று பேனர் வைப்பதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் மகாபலிபுரம் வருவதையொட்டி பேனர் வைக்க நீதிமன்றத்தில் அரசு அனுமதி கோரியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு இன்றி அனுமதி பெற்று பேனர் வைப்பதில் தவறில்லை. சட்டத்துக்கு புறம்பாக அனுமதியின்றி பேனர் வைப்பதுதான் தவறு.

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது அ.தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. ஆட்சியின் போது தமிழை கூர்மையான வாளாக மாற்றாமல் கூழாங்கல் போல் வைத்திருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.