அமைச்சர் ஜெயக்குமார் 
செய்திகள்

ராஜேந்திர பாலாஜி கூறியது அதிமுக கருத்து அல்ல- அமைச்சர் ஜெயக்குமார்

பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அ.தி.மு.க. கருத்து கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை ராயபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினார்கள்.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அவரது கருத்தாக இல்லாத பட்சத்தில் கவர்னரிடம் எப்படி முறையிடலாம்?

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வி‌ஷயத்தில் டி.என்.பி.எஸ்.சி.யை கண்டித்து தி.மு.க. நடத்தும் போராட்டம் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சீதாலட்சுமி, முதன்மை கல்வி அதிகாரி அனிதா பங்கேற்றனர்.