அமைச்சர் ஜெயக்குமார் 
செய்திகள்

சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

* சென்னையில் 13 இடங்களில்தான் மழைநீர் தேங்கியுள்ளது. 109 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன.

* திமுக ஆட்சியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.

* ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.