செய்திகள்

குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூற மறுப்பு

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றி உடனே கருத்த கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #GutkaScam #TNMinister #Jayakumar

சென்னை:

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றி உடனே கருத்த கூற முடியாது. கோர்ட்டு தீர்ப்பு நகலை பார்க்காமல் எந்த கருத்தும் கூற முடியாது என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலகும் நிலை ஏற்படுமா? என்று கேட்டதற்கு, ஒருவர் மீது குற்றச்சாட்டுவது என்பது வேறு. குற்றச்சாட்டு ஊர்ஜிதம் என்பது வேறு. எனவே விசாரணை நடைபெறும் போதுதான் இந்த கேள்வி எழும். இப்போது இது ஆரம்ப கட்டம்தான்.

இவ்வாறு அவர் கூறினார். #GutkaScam #TNMinister #Jayakumar

SCROLL FOR NEXT