செய்திகள்

அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களை குற்றம் சாட்டுவதா?: நடிகர் விஷாலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

அன்புச்செழியன் விவகாரத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நடிகர் விஷால் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மாலை மலர்

அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- பைனான்சியர் அன்புச்செழியன் விவகாரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யார் சிபாரிசுக்கு வந்தாலும் நாங்கள் விடமாட்டோம். அவர்களையும் விடமாட்டோம் என்று நடிகர் விஷால் கூறி இருக்கிறாரே?

பதில்:- விஷாலின் பேச்சு முழுமையான அளவுக்கு அது தவறான குற்றச்சாட்டு. அதை நான் முழுமையாக மறுக்கிறேன்.


விஷால் சொன்ன அந்த ஒரு வார்த்தையை முழுமையான அளவு தவிர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் சிறிதும் உண்மையில்லாத குற்றச்சாட்டை எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாது.

அன்புச்செழியன் விவகாரத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அவர் தவிர்க்க வேண்டும்.

அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்க திரைப்படத்துறையினர் பொது நிதியை உருவாக்கி தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யலாமே.