செய்திகள்

சுப்ரீம் கோர்ட் தடையை நீக்க உரிய விளக்கம் அளிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

3 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #SC #Jayakumar #3MLAs

மாலை மலர்

அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு வழங்கி இருப்பது தீர்ப்பு அல்ல. இடைக்கால தடைதான். ஏற்கனவே இந்த மாதிரி பல வழக்குகளில் பல சந்தர்ப்பங்களில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த வரலாறு உண்டு.

3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிய முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சபாநாயகர் 182 பக்கங்கள் கொண்ட விளக்கம் கேட்கும் நோட்டீசை அனுப்பி இருக்கிறார்.

உரிய விளக்கத்தை அளித்து இடைக்கால தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.