மத்திய மந்திரி ஹர்ஷ்வர்த்தன் 
செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கும்- ஹர்ஷ்வர்த்தன் பேட்டி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காம்பவுண்டு சுவர் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்ட பணிகள் விரைவில் நடைபெறும் என்று மத்திய மந்திரி ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.

மாலை மலர்

மதுரை, மார்ச். 1-

மத்திய மந்திரி ஹர்ஷ் வர்த்தன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ராமநாதபுரம், விருது நகர் மருத்துவ கல்லூரிகள் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள் ளேன்.

பிரதமர் மோடியின் பரிசாக தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் பிரதமர் மோடி வழிகாட்டுதலால் இந்தியா முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.

இவை மருத்துவ துறையில் சிறந்த மருந்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சி யாளர்களை கொண்டு செயல்பட உள்ளன. மீண்டும் அடுத்த வாரம் சனிக் கிழமை இதேபோல் நாகபட்டினத்தில் நடைபெறும் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வருடன் கலந்து கொள்கிறேன்.

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான நிதி ஆதாரங்களை மருத்துவ துறை ஒதுக்கியுள்ளது. இதற் காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஜப்பானின் “ஜெய்கா” நிறுவனம் நிதி வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காம்பவுண்டு சுவர் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்ட பணிகள் விரைவில் நடைபெறும்.

மதுரையை பொறுத்த வரை எய்ம்ஸ் மருத்துவமனை முன்மாதிரியாக அமையும். ஆராய்ச்சி மையம் மற்றும் நவீன மருத்துவ வசதிகளுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல் அமையும்.

இவ்வாறு அவர் கூறி னார்.