வேலூர்:
வேலூர் கோட்டை மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நூற்றாண்டு விழா நடைபெறும் கோட்டை மைதானத்தில் கால்கோள் எனப்படும் பந்தக்கால் நடும் விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூர் பால சுப்பிரமணியம், சோளிங்கர் என்.ஜி. பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. அணிகள் நாளைக்குள் இணைந்து விடும். அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்கும். மக்கள் அன்பை பெறவே அணிகள் இணைக்கப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றது வரவேற்கதக்கது. நாங்கள் அவர்களை எதிராளிகளாக பார்க்க வில்லை என்றார்.