மினி லாரி மோதியதால் கீழே விழுந்து கிடக்கும் இரும்பு தூணை படத்தில் காணலாம். 
செய்திகள்

மினி லாரி மோதி ரெயில்வே பாலத்தின் இரும்பு தூண் விழுந்தது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மினி லாரி மோதி ரெயில்வே பாலத்தின் இரும்பு தூண் விழுந்தது.

மாலை மலர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் இருந்து ஒரு மினி லாரி, வடுகபாளையத்துக்கு தென்னை மட்டைகளை ஏற்றுவதற்கு வந்தது. லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் வடுகபாளையம் பிரிவில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவை ரோட்டில் ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் உள்ள ரெயில்வே பாலம் வழியாக வடுகபாளையத்திற்கு லாரியை மணிகண்டன் ஓட்டி வந்தார்.

இதுகுறித்து பொள்ளாச்சி ரெயில் நிலைய ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் லாரியை பறிமுதல் செய்து, ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் இரும்பு தூண் அதிக எடை கொண்டது என்பதால் தூக்கி அப்புறப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக ரெயில்வே பாலம் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

லாரி மோதியதில் கீழே விழுந்த இரும்பு தூண் ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது. தூண் கீழே விழும்போது யாரும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பாலக்காடு கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு, அதன்பிறகே தூணை தூக்கி வைக்க முடியும். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.