செய்திகள்

மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ. 5 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்: டிரைவர் கைது

மரக்காணம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

மாலை மலர்

மரக்காணம்:

மரக்காணம் அருகே உள்ள அணிச்சகுப்பம் சோதனை சாவடியில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வாகனை சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்தமினி லாரிஒன்றை மறித்து சோதனை செய்தனர்.அப்போது அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டடு இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அட்டை பெட்டைகளை திறந்து பார்த்தபோது உள்ளே மது பாட்டில்கள் இருந்தன.

மொத்தம் 100 அட்டை பெட்டிகள் இருந்தன. அதில் 4688 மதுபாட்டில்கள் இருந்தன. லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்திய போது மதுபாட்டில்களை புதுவையில் இருந்து கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மினி லாரியையும், மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்து மரக்காணம் மது விலக்கு பிரிவில் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ 5 லட்சம் ஆகும். மினிலாரி டிரைவர் காஞ்சிபுரம் மாவட்டம் புதுபட்டியை சேர்ந்த முனியாண்டி (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.