செய்திகள்

ஆயுஷ்மான் திட்டத்தால் கராச்சியிலும் இலவச சிகிச்சை பெறலாம்? - பிரதமரின் ‘டங் ஸ்லிப்’

குஜராத் மாநிலத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்திருப்பவர்கள் கராச்சியிலும் இலவச சிகிச்சை பெறலாம் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம், ஜம்நகர் மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும் இன்று சிறப்புரையாற்றினார்.

ஜம்நகர்-பன்ட்ரா இடையிலான ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அகமதாபாத் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த மோடி, குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி, துணை முதல் மந்திரி நிதின்பாய் பட்டேலுடன் அந்த ரெயிலில் பயணம் செய்தார்.

750 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட குரு கோவிந்த் சிங் மருத்துவமனையின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார்.

இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் மக்களும், எங்கு வேண்டுமானாலும் தரமான இலவச சிகிச்சையை பெறலாம். ஜம்நகரில் வசிக்கும் ஒருவர் போபாலுக்கு சென்று நோய்வாய்ப்பட்டால் அவர் சிகிச்சைக்காக ஜம்நகருக்கு வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

ஆயுஷ்மான் அடையாள அட்டையை காட்டினால் கொல்கத்தாவிலும், கராச்சியிலும்கூட இலவசமாக சிகிச்சை பெறலாம்’ என நாத்தடுமாற்றமாக பிரதமர் கூறியதும், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரை குறிப்பிடுகிறாரே? என அங்கிருந்தவர்கள் திகைப்படைந்தனர்.

சில வினாடிகளுக்குள் சுதாரித்துகொண்ட பிரதமர் மோடி, ’கொச்சி என்று குறிப்பிடவந்த நான் கராச்சி என்று கூறி விட்டேன். சமீபகாலமாக எனது சிந்தனையின் பெரும்பகுதியை நமது அண்டைநாடு ஆக்கிரமித்து கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT