செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். #militantsgunneddown

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலும், பாகிஸ்தான் படையினரின் தாக்குதலும் அத்துமீறி நடந்துகொண்டு இருக்கிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள கெரன் எல்லைப்பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் ஊடுருவலை தடுக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிசூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிசூட்டில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் 6 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், எத்தனை பேர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் என்பது குறித்தும், அங்கிருந்து தப்பி சென்ற பயங்கரவாதிகள் குறித்தும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #militantsgunneddown