செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சூடு- பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 மத்தியபடை வீரர்கள் காயம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 மத்திய படை வீரர்கள் காயம் அடைந்தனர். #PulwamaAttack

மாலை மலர்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இன்று அதிகாலை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். காயம் அடைந்த 2 வீரர்களையும் மீட்டு புல்வாமா மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் கங்கன் பகுதியில் பாகிஸ்தானின் வங்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட மறுநாளில் பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  #PulwamaAttack