செய்திகள்

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் - ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #JKEncounter #MilitantKilled

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள தூரு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு படையினரும் அந்த பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.