ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் ஜைசல்மர் பகுதியிலிருந்து மத்தியப்பிரதேசம் குவாலியருக்கு விமானப்படையின் மிக்-21 பிசன் ரக போர் விமானம் நேற்று புறப்பட்டது. நடுவானில் பறக்கும்போது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கானர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த விமானத்தில் ஏற்பட்ட பழுதுகள் சரிபார்க்கப்பட்டபின் விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.
ஆனால் விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் அதே விமான நிலையத்தில் அவசரமாக மீண்டும் தரையிறக்கியது. இதன்காரணமாக அந்த ஓடுபாதை சுமார் அரை மணி நேரம் மூடப்பட்டதால், பிற விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.