உடுமலை:
உடுமலை பெரிய வாளவாடியில் உள்ளது கார்ப்பரேசன் வங்கி. நேற்று நள்ளிரவு வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால் கொள்ளையர்கள் வங்கிக்குள் சென்றிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. அங்கு வந்த கிராம உதவியாளர் திலீப் வங்கி நிர்வாகம் மற்றும் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் மற்றும் வங்கி பணியாளர்கள் அங்கு வந்தனர். வங்கியை சோதனை செய்தபோது திருட்டு நடைபெறவில்லை என்று தெரியவந்தது. தொழில்நுட்ப கோளாறால் அலாரம் ஒலித்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 1 மணிநேரம் ஏற்பட்ட பதட்டம் முடிவுக்கு வந்தது.