செய்திகள்

அமெரிக்க கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் ‘ஷு’க்கள் ரூ.1 கோடிக்கு ஏலம்

அமெரிக்க கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் ‘ஷு’க்கள் ரூ.1 கோடிக்கு ஏலம் விடப்பட்டன.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டன். இவர் ஒலிம்பிக் வீரர். கடந்த 1984-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அப்போது அவர் கால்களில் அணிந்து ஓடிய ‘ஷு’க்கள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன. அதை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.

இறுதியில், அந்த ‘ஷு’க்கள் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. இதன்மூலம் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய ‘ஷு’க்கள் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது.

இதற்கு முன்பு அதிகபட்சமாக ரூ.68 லட்சத்துக்கு ‘ஷு’க்கள் ஏலம் போய் இருந்தது. அவற்றை அமெரிக்க கூடைப்பந்து வீரர் அணிந்து இருந்தார்.