கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன்னில் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை உள்ளது. இதனை முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த சிலை 17.1.2013 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் திறக்கப்பட்டது. கொட நாடு எஸ்டேட் செல்லும் வழியில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஜெயலலிதா கொடநாடு வந்தால் டானிங்டன்னில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தான் செல்வார்.
ஊட்டியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.40 மணியளவில் கோத்தகிரி டானிங்டன்னில் உள்ள எம்.ஜி. ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.