செய்திகள்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரபல பாடகி சுசீலாவுடன் பாட்டுப்பாடி அசத்தும் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். #MGRCenturyCeremony #Jayakumar #Susheela

மாலை மலர்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழாவாக இன்று சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் அதிக அளவிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.