கோப்புப்படம் 
செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #MetturDam

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

நேற்று 144 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 164 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 8 ஆயிரம் அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு வழக்கம் போல 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 84.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 83.52 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam

SCROLL FOR NEXT