செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்துள்ளது.

மாலை மலர்

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி 1970 கன அடியானது. பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

நேற்று 806 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 748 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 33.36 கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 33.19 அடியாக சரிந்தது.