செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மாலை மலர்

சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 199 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 257 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 34.72 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 34.65 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.