சுரங்கம் (கோப்பு படம்) 
செய்திகள்

ரஷியாவில் சுரங்கப்பணியின் போது மீத்தேன் விபத்து - 2 பேர் பலி

ரஷியாவில் சுரங்கப்பணியின் போது மீத்தேன் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

மாஸ்கோ:

ரஷிய நாட்டின் கோமி ரிபப்ளிக் என்ற பகுதியில் நிலக்கரி சுங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் இன்று 106 பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அந்த சுரங்கத்தில் இருந்த ஒரு மீத்தேன் எரிவாயு குழாய் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் சுரங்கத்தில் சிக்கித்தவித்த 43 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் சிலர் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.