மரணம் 
செய்திகள்

மேலூரில் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிய வாலிபர் பலி

மேலூரில் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிய வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள வலையங்குளத்துபட்டியைச் சேர்ந்தவர் குமார் (வயது 19). இவர் திருச்சியில் இருந்து மதுரைக்கு வந்த அரசு பஸ் ஒன்றில் மேலூருக்கு பயணம் செய்தார். மேலூர் அருகே பஸ் வந்தபோது நான்குவழி சாலையில் ஓடும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.