கைது 
செய்திகள்

மேலூர் அருகே பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது

மேலூர் அருகே பெண் மற்றும் குழந்தையை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

கீழவளவு மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் தேபார் (வயது 56). இவரை அதே பகுதியில் வசிக்கும் குமார் (38) என்பவர் முன் விரோதம் காரணமாக அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பாக கீழவளவு போலீசில் புகார் மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் குமார் நேற்றிரவு 3 பெண்கள் உள்பட 9 பேருடன் திரண்டு வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதில் தேபார், அவரது தாயார் முத்துவீராயி மற்றும் பேரன் ஸ்ரீதர்‌ஷன் (4) ஆகிய 3 பேருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தேபாரின் உறவினர் கவுரி கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT