செய்திகள்

மேலூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மேலூர் அருகே உள்ள குருத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ராஜமூர்த்தி (வயது 19). லேத் பட்டறை தொழிலாளி.

இவர் இன்று காலை மேலூர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். கீழவளவு சாலையில் சென்றபோது நிலை தடுமாறிய அவர் அங்கிருந்த பாலத்தில் மோதினார்.

இதில் கீழே விழுந்த ராஜமூர்த்தி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் கீதா, ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT