செய்திகள்

மேலூர் அருகே அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் லாரி டிரைவர் மர்ம மரணம்

மேலூர் அருகே அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று இரவு 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள வளாகத்தில் நேற்று இரவு 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பிட்லாரை கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் நந்தக்குமார் என தெரியவந்தது.

லாரி டிரைவரான இவர் சில நாட்களுக்கு முன்பு நெல் மூடைகளை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு வந்துள்ளார். அங்கு நெல் மூட்டையை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொண்ட நந்தகுமார் பின்பு ஊருக்கு செல்லாமல் அந்தப் பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக கருங்காலக்குடி பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நந்தகுமார் நேற்று ஆஸ்பத்திரி வளாகத்தில் இறந்து கிடந்தார்.

அவர் பணத்தை செல வழித்து விட்டோம் என்ற பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

SCROLL FOR NEXT