இதையொட்டி அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வருகிற 30-ந்தேதி வரை நவராத்திரி லட்சார்ச்சனை நடக்கிறது.
விழாவையொட்டி சித்தர் பீடத்தில் கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.
ஆன்மீக குரு பங்காரு அடிகளார் சித்தர்பீடம் வந்தபோது அவருக்கு விழாப்பொறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் அவர் கருவறையில் உள்ள அம்மனுக்கு தீபாராதனை செய்து சுயம்பு அம்மனுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து அகண்ட தீபம் கருவறையினுள் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் வைக்கப்பட்டது. அதில் பங்காரு அடிகளார் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களும் எண்ணெய் விட்டு தீப ஒளியை வழிபட்டனர்.
ஆன்மீக இயக்க துணைத் தலைவர் கோ.ப. செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், அகண்டதீபவலமும் செய்யப்பட்டு இருந்தது.