ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவத்தின் கேப்டன் உட்பட நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘ரஜோரியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுககு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என மெகபூபா டுவிட் செய்துள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் இன்று காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்படுவதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு இயக்கப்படும் வாராந்திர பஸ் சர்வீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews