மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல் மந்திரி கமல் நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா இடையே பனிப்போர் நீடித்து, தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 21 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 22 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்து அம்மாநில சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
ஆளும்கட்சியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக விலகியதால் அங்கு கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டவர்கள் பங்கேற்று நாட்டில் நிலவிவரும் பல்வேறு அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்து, ஆலோசனை நடத்தினர்.