செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு நாளில் தேவேந்திரர் விழா நடக்கிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் நிறைவு விழா வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் தேவேந்திரர் பூஜையுடன் நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் தேவேந்திரர் பூஜையுடன் நடக்கிறது. இந்த விழா தேவேந்திரர் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அகில இந்திய தேவேந்திர குலமள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் விழா நடக் கிறது. அவனியாபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. காமராஜா, மாடக்குளம் தொழில் அதிபர் உதயக்குமார், ஐராவத நல்லூர், பேராசிரியர் செல்லம், பா.ஜ.க. மாநில மருத்துவரணி தலைவர் டாக்டர் கயிலை ராஜன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் மணிகண்டன், சபை பொதுச் செயலாளர் கண்ணுச்சாமி, மதுரை ஐகோர்ட்டு வக்கீல் மாயப்பெருமாள், புலியூர் டிராவல்ஸ் உரிமையாளர் பாண்டிகுமார், சபையின் மண்டல செயலாளர் அவனியாபுரம் சிற்றரசு, கல்லாயிரம் உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

அதேபோன்று மாடக்குளம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம், அனுப்பானடி, விளாச்சேரி, பழங்காநத்தம், சிந்தாமணி, கார்சேரி, மதிச்சியம், ஆரப்பாளையம், ஐராவத நல்லூரை சேர்ந்த ஊர் குடும்பனார்களும் விழாவில் பங்கேற்கிறார்கள்

SCROLL FOR NEXT