வாயில் கறுப்புத்துணி கட்டி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்திய மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவிகள். 
செய்திகள்

மதுரையில் மருத்துவ மாணவிகள் வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம்

மதுரையில் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் பட்டமேற்படிப்பு மாணவிகள் இன்று மனிதச் சங்கிலியாக வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

மதுரை:

பணி வாய்ப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கலந்தாய்வின் போது அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு வாயிலாக டாக்டர்கள் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவ-மாணவிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 5-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினர். அரசு ஆஸ்பத்திரி முதல்வர் அறை முன்பு இருந்து கைகோர்த்து மனிதச்சங்கிலியாக நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மனிதச்சங்கிலியாக நின்ற மாணவிகள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். மேலும் தங்கள் வாயில் கறுப்புத்துணியை கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.