தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த காட்சி 
செய்திகள்

கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் 167 பேர், அலுவலர்கள் 30 பேர், அம்மா உணவக ஊழியர்கள் 24 பேர், பரப்புரையாளர்கள் 8 பேர், டெங்கு ஒழிப்பு கணக்கெடுப்பு பணியாளர்கள் 56 பேர் என மொத்தம் 285 பேருக்கு காய்ச்சல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அனைவருக்கும் கபசுர குடிநீர், சத்து மாத்திரை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் முதல் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து, குலுக்கல் முறையில் தேர்வு செய்து, தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர். பின்னர் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. 

இதில் நகராட்சி ஆணையாளர் சந்திரா, டாக்டர்கள் செல்வி, இனியாள்மண்டோதரி, சத்தியநாதன், நித்யா, சுவேதா, வளர்மதி, சித்தா டாக்டர். பிரேமா, சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.