பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி. ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதேபோல் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேகதாது விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.