தற்கொலை 
செய்திகள்

மேச்சேரி அருகே விவசாயி தற்கொலை

மேச்சேரி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மேச்சேரி:

மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி தாரல் குட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் கடந்த 6 மாதங்களாக மேச்சேரி அருகே வெள்ளப்பம்பட்டி பகுதியில் தங்கி விவசாயம் செய்துவந்தார். இவர் தீராத ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவி, வெள்ளப்பம்பட்டி மலைப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.