வழக்கு பதிவு 
செய்திகள்

மேச்சேரி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேர் மீது வழக்கு

மேச்சேரி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மேச்சேரி:

மேச்சேரி அருகே எறகுண்டப்பட்டி கோம்புக்காடு பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பணம் கட்டி சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மேச்சேரி அமரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 25), சதீஷ்குமார் (24), திமிரி கோட்டையை சேர்ந்த வேலன் (51), சரவணன் (39), எறகுண்டப்பட்டி செங்குட்டை திட்டு பகுதியைச் சேர்ந்த சேகர் (37)ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.