செய்திகள்

மெக்கானிக் குத்திக்கொலை- 4 நண்பர்களுக்கு வலைவீச்சு

மதுரை அழகர்கோவில் அருகே மெக்கானிக் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது 4 நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரை அழகர்கோவில் அருகே உள்ள அரும்பனூர் பெரியாறு பாசன கால்வாய் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் வாலிபர் பிணம் கிடந்தது. இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வாடிப்பட்டி அருகே உள்ள எருக்கலைநத்தம் கிராமத்தைச் சேர்ந்தகுமார் (வயது32) மெக்கானிக் என தெரியவந்தது.

இவர் தனது நண்பர்கள் சரவணன், அழகர்சாமி, டேவிட், ஜோஸ் ஆகியோருடன் சிதம்பரம் பட்டி ஓடை பகுதியில் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் குமாரின் தலையில் கல்லைப்போட்டும், கூரிய ஆயுதத்தால் குத்தியும் கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். #tamilnews