சுஷ்மா சுவராஜ் 
செய்திகள்

வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்படும்

தலைநகர் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் மந்திரியாக பதவி வகித்தவர் சுஷ்மா சுவராஜ்.  இவர் கடந்த ஆகஸ்டு மாதம் காலமானார்.

சுஷ்மா சுவராஜ் தனது பதவிக் காலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தேவைப்படும் உதவிகளை இந்திய தூதரகம் மூலம் விரைந்து செய்துவந்தார். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரவாசி பாரதிய கேந்திரத்தின் பெயர் சுஷ்மா பவன் என அழைக்கப்பட உள்ளது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் மந்திரி சுஷ்மா சுவராஜின் சேவையை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 14-ம் தேதி முதல் பிரவாசி பாரதிய கேந்திரத்தின் பெயர் சுஷ்மா பவன் என அழைக்கப்படும்.

இதேபோல், வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.